Chennai: இந்திய பெருங்கடலில் எண்ணெய்க் கசிவு; கண்காணிப்பு தீவிரம் - ICG
இலங்கையின் கொழும்பிலிருந்து மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவுக்கு சென்றுக் கொண்டிருந்த சரக்குக் கப்பல் MV Devon vesselவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.
சென்னை: இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் போர்த்துகீசிய கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் கடலில் கலப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொள்கலன் கப்பலான எம்.வி.டெவோனில் இருந்து 10 கி.எல் (10 kiloliter)) அளவில் எண்ணைய்க் கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து தென்கிழக்கில் 450 கி.மீ தொலைவில் இந்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது, இலங்கையின் கொழும்பிலிருந்து மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவுக்கு சென்றுக் கொண்டிருந்த சரக்குக் கப்பல் MV Devon vesselவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், கப்பலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பதால், கப்பல் தனது இலக்கை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இன்று (ஜூன் 18) மாலைக்குள் ஹால்டியா துறைமுகத்திற்கு சரக்குக் கப்பல் சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read | ICG on Colombo Ship fire: தணிந்தது தீ, எண்ணெய் கசிவு இல்லை
இந்த எண்ணெய் கசிவு குறித்த தகவல்களை புதன்கிழமை (ஜூன் 16) பிற்பகுதியில் இந்திய கடலோர காவல்படையிடம் (Indian Coast Guard) கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையம் (Maritime rescue and Coordination Center) தெரிவித்தது. மேலதிக விசாரணையில் சுமார் 120 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட எம்.வி.டெவன் (MV Devon vessel) கப்பலின் இடது புற எரிபொருள் டாங்கில், விரிசல் ஏற்பட்டது தெரியவந்தது.
இந்த விரிசலின் விளைவாக 10KL எண்ணெய் கடலில் சிந்தியது, ஆனால் மீதமுள்ள எண்ணெய் மற்றொரு டாங்கில் மாற்றப்பட்டு, அதிக கசிவு தடுக்கப்பட்டது. இந்த கப்பல் 382 கொள்கலன்களில் 10,795 டன் சரக்குகள் செல்கின்றன. ஏற்றிச் செல்கிறது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 பேர் இந்தக் கப்பலை இயக்குகின்றனர். நிர்வகிக்கப்படுகிறது.
ICG தொடர்ந்து கப்பலுடன் தொடர்பில் உள்ளது மற்றும் கப்பல் சரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ICG மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உஜார்படுத்தப்பட்டு, எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக வைக்கப்பட்டுள்ளது.
Also Read | டக் தே புயலால் தரைதட்டிய கப்பலில் எண்ணெய் கசிவு; மீன்பிடி தொழில் பாதிப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய கடலோர காவல்படையில் விமானங்களும் கப்பல்களும் உதவிக்குச் செல்லத் தயார்நிலையில் உல்ளன.
சில வாரங்களுக்கு முன்னதாக இலங்கையுடன் இணைந்து இந்திய கடலோர காவல்படை மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில், எம்.வி. எக்ஸ்-பிரஸ் முத்து கப்பலில் ஏற்பட்ட தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. இதனால் ஒரு பெரிய சுற்றுச்சூழல் பேரழிவைத் தவிர்க்க முடிந்தது.
தற்போது கொழும்பிலிருந்து புறப்பட்ட கப்பலில் ஏற்பட்ட கசிவு சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தாமல் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
Also Read | மொரீஷியஸில் பயங்கர எண்ணெய் கசிவு: அவசரநிலையை அறிவித்த அரசு..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR