சூறாவளிப்புயல் டக் தேவின் தாக்கத்தினால் கடலோரப் பகுதியில் சிக்கி தரை தட்டியது ஒரு கப்பல்...
எண்ணெயை எடுத்துக் கொண்டு வந்த அந்த கப்பலில் தற்போது கசிவு ஏற்பட்டுள்ளது. கப்பலில் 80,000 லிட்டர் எண்ணெய் இருப்பதால் கவலைகள் அதிகரித்துள்ளன.
Also Read | "மேயாத மான்” பட இயக்குனர் குடும்பத்தில் 14 பேரை மேய்ந்து தீர்த்த கொரோனா!
கசியும் எண்ணெய் கடலில் பரவுவதாக மீனவர்கள் கூறுகின்றனர் எண்ணெய் கசிவதால், கடலில் மீன்பிடிக்க முடியவில்லை என்று மீனவர்கள் வேதனை
டக் தே சூறாவளி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் பெருத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்றது.
வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்த புயல் மும்பை கடல் பகுதி வழியாக குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. அப்போது, இந்த கப்பலையும் பாதித்தது டக் தே.
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ் தே’ புயல் காரணமாக, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டன.