சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை சென்னை காவல் துறை எடுத்துவருகிறது. சரித்திரி பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றவழக்குகள் உள்ள நபர்களுக்கு எதிரான ஒரு சிறப்பு தணிக்கையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில் நேற்று (10.09.2022) சரித்திர பதிவேடு ரவுடிகள் (HS Rowdies) மற்றும் கொலை முயற்சி, இரண்டுக்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள்  உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு சோதனை மேற்கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மற்ற மாநிலங்களைவிட குறைவுதான் -மின் கட்டணம் குறித்து அமைச்சர் விளக்கம்


இந்தச் சோதனையில், திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்த  490 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (HS Rowdies) கண்காணித்தும், நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.  


மேலும், 20 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் (Bind over)பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை 2,255 குற்றவாளிகளிடம் இருந்து  நன்னடத்தை பிணை பத்திரம் (Bind Over) பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் 7 நபர்களிடமிருந்து திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் (Bind over) பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை 404 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 207 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | மு.க. ஸ்டாலின் வாழ்க - பாரதியார் நினைவு நாளில் இளையராஜா புகழாரம்


சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு வருவதால், குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் குற்ற பின்னணி நபர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ