சென்னை அயனாவரம், தாம்பரம், மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து 8 -க்கும் மேற்பட்ட, சரக்கு வாகன திருட்டில் ஈடுபட்ட பிரபல கார் திருடன் ஆஸ்டின் இன்பராஜ் மற்றும் அவனது நான்கு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை  கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டம் , அயனாவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து பொலேரோ பிக்கப் மற்றும் அஷோக் லேலாண்ட் தோஸ்த் வாகனம் திருடு போனதாக புகார் வந்தது. இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் மற்றும்  பிரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ் (கூடுதல் காவல் ஆணையர் - தெற்கு) அவர்களது உத்தரவின்படி, நரேந்திரன் நாயர் ஐபிஎஸ் (இணை ஆணையர் - கிழக்கு & தெற்கு) மற்றும் கோபி,  துணை ஆணையர் (கீழ்பாக்கம் காவல் மாவட்டம் ) அவர்களது  ஆலோசனையின் பேரில், அயானவரம்  உதவி ஆணையர் ஜவஹர் மேற்பார்வையில், குற்றப்பிரிவு ஆய்வாளர் சபரிநாதன் தலைமையில் , சப் இன்ஸ்பெக்டர் மீனா, தலைமை காவலர்கள் சரவணகுமார் HC 26286, பிரதீப் HC 27023, ராஜேஷ் HC 27371, பெண் ஆர்வின் சாம் HC , திருகுமரன், பழனிவேல்,  அமாலுதீன், காவலர்கள், திருநாவுக்கரசு, சூர்ய பிரகாஷ் ஆகியோர் கொண்ட  தனிப்படை அமைக்கப்பட்டது.   


இதனையடுத்து சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த  தாமோதரன் (56), என்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் ஈபென் இன்பராஜ் (49) என்ற நபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு கார் மற்றும் சரக்கு வாகனங்கள் திருடுவதற்கு  அடிக்கடி சாவி தயார் செய்து கொடுக்கும் வேலையை தாமோதரன் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.


மேலும் படிக்க | தமிழகத்தில் மருத்துவத்துறையில் திமுக அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்கள்! 


அதன்படி வாகனங்களை நோட்டமிட்டு அந்த காருக்கு ஏற்ற சாவிகளை  தாமோதரன் மற்றும் ஆஸ்டின் ஈபன் இன்பராஜ் ஆகிய இருவரும் தயார் செய்து திருடி உள்ளனர்.  திருடிய வாகனத்துடன் கோவை உக்கடம் மற்றும் பல்லடம் பகுதியில் விற்க சுற்றி வந்த குற்றவாளி ஆஸ்டின் இன்பராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 



பிரபல சரக்கு வாகன திருடனான இவருக்கு தமிழகம் முழுவதும் கன்னியாகுமரி, நாகர்கோவில்,  தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை -யின் பல்வேறு காவல் நிலையத்தில் 35 க்கும் மேற்பட்ட கார் திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


அவரிடம் நடத்திய விசரணையில் குற்ற சம்பவத்தில் தொடர்புடைய  மதுரையைச் சேர்ந்த தனகோபால் ( சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்) மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த ஜெயராஜ்,  கோயம்புத்தூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது, இமாம் அலி ( அல் உமா இயக்கத்தை சேர்ந்த - 1998 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 13 வருட சிறை தண்டனை பெற்று வெளியே வந்தவர்  என்பதும் ,ஏற்கனவே கோவை, புளியங்குளம் பகுதியில் ஒரு கார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, அஷோக் லேலாண்ட் தோஸ்த் சரக்கு வாகனம், ஒரு பொலேரோ பிக்கப் என இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  


இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த அயனாவரம் குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க | இதையெல்லாம் திருடுவாங்க..இரும்பு நடைபாதையை திருடும் கும்பல்: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ