சென்னையில் நேற்று மதியம் முதல்  இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் முக்கிய சாலைகளிலும் மழை நீர் அதிகளவில் தேங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


மேலும் சென்னையில் சில சுரங்கப்பாதைகள் மழைநீர் தேங்கியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டது. 


இந்நிலையில் தொடர்ந்து பெய்த கன மழையால் சென்னை மயிலாப்பூரில் வீட்டின் வெளியே தேங்கியிருந்த மழை (TN Rain) நீரில் கால் வைத்தவுடன் மின்சாரம் பாய்ந்து 13 வயது சிறுவன் லட்சுமணன் உயிரிழந்தார். 


மேலும் சென்னை புளியந்தோப்பு அம்மையம்மாள் தெருவில் மின்சாரம் தாக்கி கீழே விழந்த மீனா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


அதேபோல் சென்னை ஓட்டேரியில் நியூ போண்ட்ஸ் சாலையில் மின்சாரம் பாய்ந்து தமிழரசி என்ற மூதாட்டி உயிரிழந்தார். கன மழையின் காரணமாக மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் (Chennai) தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சென்னையில் ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியும் நடந்துவருகிறது.


ALSO READ | Chennai Rain: திக்குமுக்காடிய சென்னை; 4 மாவட்டங்களுக்கு விடுமுறை! 


ALSO READ | கனமழை எச்சரிக்கை! சென்னை மற்றும் மூன்று மாவட்டங்களுக்கு RED ALERT


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR