நாளை அதிக மழை வருமா? வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்!
Chennai Rain: வடகிழக்கு பருவ மழை நேற்று முதல் தொடர்ந்து பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் எதிர்பார்க்கப்பட்ட அதிக மழை பெய்யவில்லை.
வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால், கடந்த வாரம் முதலே கிழக்கு கடற்கரை மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், வானிலையை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இன்று அதிக மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய புயலாக மாறவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அக்டோபர் 17ஆம் தேதி வியாழன் அன்று தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் இடையே புதுச்சேரி மற்றும் நெல்லூர் ஆகிய இரு இடங்களுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று, சென்னையில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழையை எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அனைவரும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டது. வியாழன் மற்றும் வெள்ளி அதிக மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வார இறுதியில் வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் இன்று காலை முதல் மழை பெய்யவில்லை, வெயில் இல்லாததால் குளிர்ந்த காற்று மட்டும் வீசி வருகிறது.
சென்னையில் நேற்று பெய்த கனமழையால், தெருக்களில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், ECR போன்ற நகரின் சில இடங்களில் 13 செ.மீ முதல் 10 செ.மீ வரை மழை பொலிவு இருந்தது. இதன் காரணமாக பல சுற்றுப்புறங்கள் மற்றும் பெரிய சாலைகள் தண்ணீரில் மூழ்கி வாகனங்கள் செல்ல கடினமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். மேலும் பேருந்துகள் மற்றும் பிற பொது போக்குவரத்துகளும் சரியாக இயங்கவில்லை. பேரிடருக்குப் பிறகு மக்களுக்கு உதவ தமிழக அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதுகாப்பாக இருக்குமாறும், தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதி தீவிர கனமழைக்கான வாய்ப்பு குறைவு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தீவிர கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் போக்கு மாறத் தொடங்கியிருப்பதால் கனமழை பயத்தில் இருந்த சென்னை மக்கள் நிம்மதியடையலாம். காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்று கடக்கும் பகுதிக்கு வடக்கே இருக்கும் என்பதால் சென்னை மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. எதிர்பார்த்ததை விட குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | Chennai Rain Good News : சென்னை மக்களுக்கு குட் நியூஸ், கன மழை பயம் இனி வேண்டாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ