சென்னை: சுமார் ஆறு நாட்களாக கொட்டித் தீர்க்கும் மழை சென்னை மக்களை பாடாய் படுத்து வருகிறது. விடிய விடிய பெய்த கன மழையால் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் மழைநீர் புகுந்தது. இதன் காரணமாக மருத்துவமனை நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையை (Chennai) அடுத்த குரோம்பேடை அரசு பொதுமருத்துவமனையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை விடிய விடிய கொட்டிய மழையால் மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் புகுந்து சுமார் 3 அடி வரை தேங்கியுள்ளது. இதனால மருத்துவமனையில் உள்ள உள்நோளிகள் மற்றும்  குழந்தை பெற்ற தாய்மார்கள் அனைவரையும் மாற்று இடங்களுக்கு அதிகாரிகள் அப்புறபடுத்தினர்.


மேலும் மருத்துவமனையின் பின்புறம் உள்ள பிணவறை முழுவதுமாக நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால உள்நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாவது மட்டும் இல்லாமல்  வெளிநோயாகிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் மருத்துவமனையில் புகுந்த வெள்ளநீரால் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஓவ்வொரு ஆண்டும் மழைகாலங்களில் இதுபோன்ற நிலை உள்ளதால் மருத்துவமனை வளாகத்தை மழை வெள்ளம் பாதிக்காத வகையில் புதுபித்து தரவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தழிழக அரசுக்கு (TN Government) கோரிக்கை வைத்துள்ளனர்.


ALSO READ: மக்களுக்கு தரமான உணவு, மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்திட உத்தரவு


முன்னதாக, வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மாலைக்குள் கரையைக் கடக்கும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரு நாட்களாக அதிகன மழை (Rain) பெய்து வருகிறது. 


இதற்கிடையில், தமிழகத்தில் மழை வெள்ள நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்றது. கனமழை காரணமாக சென்னை கோடம்பாக்கம், அசோக் நகர் உட்பட பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.


தமிழகத்தில் மட்டுமல்லாமல், புதுச்சேரியில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 


ALSO READ: சென்னையில் எப்போது நிற்கும் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR