Chennai Latest News Updates: சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், கல்லூரி படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் படித்த டியூஷனில்தான் அவர்களின் காதல் மலர்ந்தாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் அந்த கல்லூரி பெண்ணின் பெற்றோர்களுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால், பெற்றோர்கள் இருவருக்கும் எச்சரிக்கை செய்து இனி ஒருவருயொருவர் பார்த்துக்கொள்ளவே கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதல் முறிவினால் அந்த 17 வயது சிறுவன் தற்கொலைக்கும் முயன்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்றோரின் எச்சரிக்கையை அடுத்து, இருவரும் பிரிந்து விட்டனர், ஒருவரையொருவர் அதன்பின் குறுகிய காலத்திற்கு சந்திக்கவும் இல்லை என கூறப்படுகிறது. இருந்தாலும், அந்த சிறுவன் தொடர்ந்து கல்லூரி மாணவியிடம் அவர் பேச முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.


ஐ விக்ரம் போல் மாறிய மாணவன்


ஆனால் அந்த மாணவி பெற்றோர் சொல் பேச்சை மீற முடியாது என்று கூறி, காதலை தொடர முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுபோல் தொடர்ந்து பேச முயற்சிக்க கூடாது என கடுமையான வார்த்தைகளை தெரிவித்து மாணவனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த 17 வயது சிறுவன் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. கோபமடைந்த சிறுவன் அந்த கல்லூரி மாணவியையும், தனது காதலை பிரித்த அவளின் பெற்றோரையும் ஒருங்கே பழிவாங்க வேண்டும் என ஒரு மாஸ்டர் பிளானை போட்டியிருக்கிறான்.


மேலும் படிக்க | ஆகஸ்டில் மாணவர்களுக்கு டபுள் குஷி காத்திருக்கு... பள்ளி எத்தனை நாள்கள் லீவ் தெரியுமா?


'ஐ' திரைப்படத்தில் விக்ரம் கதாபாத்திரம் டிசைன், டிசைனாக எதிரிகளை பழிக்குப் பழி வாங்கும் அல்லவா அந்த வகையில் அந்த பெண்ணையும் அவளின் பெற்றோரையும் பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளான்.  மொபைல் ஆப்கள் மூலம் கல்லூரி மாணவியை பழிவாங்க திட்டமிட்டிருக்கிறான். அதற்காக அந்த பெண்ணின் வீட்டு முகவரிக்கு சோமாட்டோ, ஸ்விக்கி, அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல டெலிவரி ஆப்களின் மூலம் CASH ON  DELIVERY முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட   ஆர்டர்களை போட்டுள்ளான்.


ஆன்லைன் ஆர்டர்களால் டார்ச்சர்


மாணவி அல்லது அவரது பெற்றோர்க்கும் டெலிவரி செய்ய வரும் ஊழியிருக்கும் சண்டை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே  தான் ஆர்டர் செய்த அனைத்து பொருட்களையும்  CASH ON  DELIVERY முறையில் சிறுவன் ஆர்டர் செய்திருக்கிறான். இதனால் பல டெலிவரி ஊழியர்கள் கல்லூரி மாணவியின் முகவரிக்கு சென்று ஆர்டர் செய்த பொருளை கொடுத்து பொருளுக்கான பணத்தை கேட்டிருக்கின்றனர்.


வீட்டிற்கு வந்த டெலிவரி ஊழியர்களிடம் நாங்கள் ஆர்டர் செய்யவில்லை என கல்லூரி மாணவியும் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆன்லைன் டெலிவரி ஊழியர்களோ, Cash On Delivery முறையில் போட்டுவிட்டு இப்போது இல்லை என கூறுகிறீர்களா என பெண்ணிடமும், பெற்றோரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதாவது இந்த மூன்று நாள்களுக்கு நீடித்துள்ளது. மூன்று நாள்கள் தொடர்ந்து இதுபோல் ஆர்டர்கள் வர அந்த பெண்ணும், பெற்றோரும் மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.


புகாரும் கைதும்... 


இது போதாது என நினைத்த அந்த சிறுவன் மற்றொரு சேட்டையையும் செய்து மாணவிக்கு தொல்லை கொடுத்துள்ளார். ஓலா, உபேர் போன்ற வாடகை வாகனங்களை புக் செய்யும் ஆப்களில் 77 முறை அந்த மாணவியின் முகவரிக்கு புக்கிங் செய்திருக்கிறார். ஏற்கெனவே மன உளச்சலில் இருந்த அவர்கள் உடனடியாக போலீஸில் புகார் அளிக்க திட்டமிட்டனர்.


இதனையடுத்து சென்னை கிழக்கு மண்டல் சைபர் கிரைம் போலீசாரிடம் அந்த கல்லூரி மாணவியின் தந்தை புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து உடனடியாக விசாரணையை தொடங்கினர். அதில் ஆன்லைனில் ஆர்டர் போட்ட மொபைல் நம்பர் மற்றும் இமெயில் ஆகியவற்றை கண்டுபிடித்து ஐபி முகவரி மூலமாக சிறுவனை போலீசார் பிடித்துவிட்டனர். கைதுக்கு பின்னான போலீசாரின் விசாரணையில்தான் இந்த அனைத்தையும் அவன் கூறியுள்ளார். 


சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்


இரண்டு Wifi ரூட்டர்கள் மற்றும் இரண்டு மொபைல்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது அந்த சிறுவன் 18 வயதை அடைந்துவிட்டார். கல்லூரி முதலாமாண்டு படித்து வரும் சூழலில், படிப்பில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக சிறார் நீதிமன்றத்தில் அந்த சிறுவனை ஆஜர்படுத்தினர். தொடர்ந்து சிறுவனுக்கு மனநல ஆலோசனை வல்லுநர்களால் வழங்கப்பட்டது. அதன்பின் அவனின் தாயார் உடன் அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | கிசுகிசு : சேட்டைக்காரரின் தகிடுதத்ததால் கலகலக்கும் இயக்குநரின் குடில் கட்சி..!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ