மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஜூன் 2 வரை காவல் நீட்டிப்பு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை ஜூன் 2-ம் தேதி வரை காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் வைகோ அண்மையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் கைது செய்யப்படார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் அவரது காவல் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
தேச துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 25 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் 25 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்பொழுது நீதிபதி, ஜூன் 2-ம் தேதி வரை வைகோவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர்.