இன்று முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்பட உள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றாம் தேதி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, இன்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபாரதம் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 


அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர், விற்பனை செய்வோர், சேமித்துவைப்போர், வணிக ரீதியாக பயன்படுத்தும் பெரிய மற்றும் சிறிய கடைக்காரர்கள், பொதுமக்கள் என ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் முதல் முறை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால், 25 ஆயிரம் ரூபாயும், 2வது முறை பிடிப்பட்டால் 50 ஆயிரமும், மூன்றாவது முறை சிக்கினால் ஒரு லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்  என்றும், 4வது முறையாக பிடிபட்டால், விற்பவரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிகப்பட்டுள்ளது. 


பொதுமக்களைப் பொறுத்தவரை,  அதிகாரிகள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளும் போது பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ந்து அவர்கள், பிளாஸ்டிக் பொருட்களை சேமித்துவைத்தால் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.