வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக உறுவாகியுள்ளதால், புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அவர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில்... 


"உள்தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும். 


அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக உறுவாகியுள்ளதால் புயலாக மாற வாய்ப்புள்ளது. உறுவாகும் புயல் ஒரிசா, வடக்கு ஆந்திரா பகுதி நோக்கி பயணிக்கும்.


இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.


புயல் எச்சரிக்கை இருப்பதால் பருவமழை பொழிய காலதாமதம் ஏற்பட்டுள்ளது. புயலுக்கு பின்னர் பருவமழை துவங்கும்." என தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் மழை பெய்துள்ளதாகவும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார்!