சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபடுவதாக செம்பியம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து  தனிப்படை போலீசார் தொடர்ந்து அவரை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் வைத்து நேற்று இரவு அஜித் என்கின்ற குணாநிதி 24 என்ற நபரை கைது செய்தனர். இவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் இவர் மீது 10 குற்ற வழக்குகள் உள்ளதும், செம்பியம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடி பிரிவில் இவர் உள்ளதும் தெரிய வந்தது. மேலும் இவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவருக்கு தெரிந்த திருமுல்லைவாயில் வீட்டில் வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆபாசமாக கேள்வி கேட்டு 'யூடியூப்' சேனலில் பதிவேற்றம்.. தற்கொலை முயற்சி செய்த இளம்பெண்!


இதனை யடுத்து போலீசார் திருமுல்லைவாயில் பகுதிக்கு சென்று இவர் கூறிய வீட்டில் இருந்து சுமார் 3300 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவரிடம் விசாரணை மேற்கொண்டபோது முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சங்கர் பாய் 27 என்ற நபர் வலி நிவாரண மாத்திரைகளை ஹைதராபாத்தில் இருந்து வாங்கி அதனை அயப்பாக்கத்தைச் சேர்ந்த அலி என்பவரிடம் கொடுத்துள்ளார். அலி மேற்கண்ட போதை மாத்திரைகளை தற்போது கைது செய்யப்பட்டுள்ள அஜித் என்ற குணாநிதி யிடம் கொடுத்து விற்பனை செய்யக் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அஜித் தனக்கு தெரிந்த நபர்களிடம் இந்த மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அஜித்திடம் விசாரணை மேற்கொண்டு வரும் செம்பியம் போலீசார் இந்த வழக்கில்  முக்கிய நபர்களான சங்கர் பாய் மற்றும் அலி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.


தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கட்டுகடங்காத வகையில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை செய்யப்படுவது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும், அவை போதுமானதாக இருக்கவில்லை. சில இடங்களில் ‘காக்கிகள்’ இந்த சட்டவிரோத செயலுக்கு துணைபோவதாக கூறப்படுகிறது. 


சில இடங்களில் பொதுமக்கள் யாரேனும் புகார் கொடுத்தாலும், அவை குறித்து காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. கொடுக்க வேண்டியதை கொடுத்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துசப்ளையர்கள் சரிகட்டிவிடுவதால், குறிப்பிட்ட ’காக்கிகள்’ சைலண்ட் மோடுக்கு சென்றுவிடுகின்றனர். மேலும், புகார் கொடுத்தவர்களின் விவரங்களையும் கசியவிட்டுவிடுகின்றனர். இதனை பெற்றுக் கொள்ளும் போதை ஆசாமிகள் புகார் கொடுத்த பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், பல ஊர்களில் பொதுமக்கள் இது குறித்து புகார் கொடுக்கவே முன்வருவதில்லை. போதை மருந்து தடுப்பு குறித்து எடுக்கப்படும் சில நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாகவே இருக்கிறது என பொதுமக்களே வெளிப்படையாக பேசிக் கொள்கின்றனர். தமிழ்நாடு காவல்துறை இந்த போதைபொருள் தடுப்பு விஷயத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது.


மேலும் படிக்க | திருச்சி மலைக்கோட்டை உச்சியில் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ