உலகின் 2வது மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்ற 12 வயது சிறுவன் ஆர்.ப்ரக்நாந்தா!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தாலியில் நடைபெற்ற கிரெண்டின் ஓபன் செஸ் தொடரில் கலந்து கொண்ட ப்ரக்நாந்தா, இந்த சாதனையை படைத்துள்ளார். உலகின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனை, 2002-ல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 12 வயது உக்ரைன் சிறுவன் செர்ஜெட் கர்ஜகினிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. கர்ஜகினை விட ப்ரக்நாந்தா வெறும் 3 மாதங்கள் மூத்தவர் ஆவார். 


கடந்த 2016-ம் ஆண்டு 10 வயதில், உலகின் மிக இளைய செஸ் மாஸ்டர் என்ற சாதனையை படைத்த ப்ரக்நாந்தா, தற்போது 12 ஆண்டுகள் 10 மாதங்கள் 13 நாட்கள் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று தனது சாதனைகளை நீட்டித்துள்ளார். 8-வது சுற்றில், கிராண்ட் மாஸ்டர் மோனிகா லிகாவை வீழ்த்திய சிறுவன் ப்ரக்நாந்தா, இறுதி சுற்றிலும் ப்ருஜ்சர்ஸ் ரோலந்தை வீழ்த்தி தனது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றினர். 


இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான விசுவநாதன் ஆனந்த், ப்ரக்நாந்தாவு-க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது!