13வது ஆண்டு, 'சென்னையில் திருவையாறு' நிகழ்ச்சி, நேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் கோலாகலமாக துவங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல இசைக்குழுவான, லஷ்மன் ஸ்ருதி சார்பில், 2015 முதல், 'சென்னையில் திருவையாறு' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 


அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி, சென்னை, காமராஜர் அரங்கில், நேற்று துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக, டி.வி.ராஜகோபாலின் நாதஸ்வர நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சுகுணா வரதாச்சாரி தலைமையில், பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடப்பட்டன. இதையடுத்து, நடந்த துவக்க விழாவில், இசையமைப்பாளர் தேவா குத்துவிளக்கேற்றி, விழாவை துவக்கி வைத்தார்.


இந்த ஆண்டிற்கான, 'இசை ஆழ்வார்' விருது, உமையாள்புரம் சிவராமனுக்கு, பிரபல பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன் வழங்கி கவுரவித்தார். விழாவை, லட்சுமணன்தொகுத்து வழங்கினார்.