ஸ்ரீராம நவமி, சிவராத்திரிக்கு பொது விடுமுறை அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஸ்ரீராம நவமி, சிவராத்திரி-க்கு பொது விடுமுறை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி கடலூரை சேர்ந்த அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த மனுவில், ஸ்ரீராம நவமி, சிவராத்திரியைக் கொண்டாடும் வகையில் அந்த நாட்களை பொது விடுமுறையாக அறிவிக்கும் வேண்டும் என்றும், இது தொடர்பாக கடந்த 2023 அக்டோபர் 14ஆம் தேதி மத்திய உள்துறை செயலாளர், சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த மனுக்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காததால் அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அர்ஜுனன் இளையராஜா தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


மேலும் படிக்க | எம்ஜிஆர் போட்ட பிச்சையினால் தான் கருணாநிதி முதல்வர் ஆனார் - கடம்பூர் ராஜூ!


இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஸ்ரீராம நவமி, சிவராத்திரிக்கு விடுமுறை அறிவிக்கும்படி  நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும், மனுதாரர் தன்னுடைய கோரிக்கை மனுவை பரிசீலிக்க மத்திய அரசை அணுகலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


பொதுவிடுமுறை


இந்தியா, கலாச்சார ரீதியில் வேறுபட்டிருந்தாலும், பல்வேறு பண்டிகைகளையும், விடுமுறைகளையும் கொண்டாடும் சமுதாயம் ஆகும். இந்தியாவில் நான்கு தேசிய நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. ஆகஸ்டு 15 அன்று சுதந்திர தினம், அக்டோபர் 2 அன்று மாகத்மா காந்தி பிறந்த தினம், ஜனவரி 26 அன்று குடியரசு தினம் மற்றும் ஏப்ரல் 14 அன்று அம்பேத்கார் தினம் ஆகிய நான்கு நாட்களும் தேசிய விடுமுறை நாட்கள் ஆகும். 


இந்த நிலையில், ஸ்ரீராம நவமி, சிவராத்திரிக்கு பொது விடுமுறை அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு பொது விடுமுறை வழங்குவது தொடர்பாக அறிவுறுத்த முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளது. 


மேலும் படிக்க | அன்னதானத்திற்கு 50 கோடி ரூபாய் கொடுத்தாரா பிரபாஸ்? இல்லைப்பா இல்லை! ஆனா...


இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் பிரான்பிரதிஷ்டா நிகழ்ச்சிக்காக, குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2:30 மணி வரை அரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் திறப்பு விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களாக மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன. ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜன.22ஆம் தேதி அன்று தமிழகத்தில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.


மேலும் படிக்க | பிரதமர் மோடி வருகை 3 நகரங்களில் இதை செய்யக்கூடாது...! அதிரடி உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ