வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 8 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழு நேற்று தமிழகம் வந்தார்கள். 


கோவிட் -19 பாதுகாப்பு விதிமுறையான சமூக இடைவெளியை கடுமையாக கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக, தமிழகத்தில் 25,000 கூடுதல் வாக்குச் சாவடிகள்  அமைக்கப்படும் என்றும், மேலும் வாக்களிக்கும் நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் மொத்த வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 68,000 முதல் 93,000  என்ற அளவிற்கு அதிகரிக்கப்படும். 


இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தனது இரண்டு நாள் பயணத்தின் போது, ​​தேர்தல் அதிகாரிகள் குழுவுடன் சேர்ந்து மாநிலத்தில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார்.


கோவிட் -19 (COVID-19) பரவாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பான தேர்தல்களை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் வலியுறுத்தினார். கன்னியாகுமரி தொகுதிக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தலும் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலுடன் நடைபெற உள்ளது.


ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து பேசிய தேர்தல் ஆணையர், பள்ளித் தேர்வுகள், கடுமையான கோடைக்காலம் மற்றும் பண்டிகைகள் போன்றவை குறித்து பல அரசியல் கட்சிகள் கோரிக்கைகள் வைத்துள்ளதாக கூறினார். தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்கு முன்னர் அனைத்து விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையர் கூறினார்.


முறைகேடுகளுக்கு எதிரான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்படும் என்றும்,  இரண்டு சிறப்பு பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட அளவிலான பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறினார்.


இருப்பினும், மாநில கலால் துறையின் செயல்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்தது, இது முறைகேடுகளை தடுக்கவில்லை என்றும்,  சிறிய அளவிலான குற்றவாளிகளை மட்டுமே பிடித்தது என்றும், பெரிய அளவில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் காப்பாற்றப்பட்டனர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


தென் மாநிலத்தில் தேர்தல்களை சிறப்பாக நடத்துவது குறித்து பல அதிகாரிகளை சந்தித்து விவாதித்ததாக  தலைமை தேர்தல் ஆணையர் மேலும் தெரிவித்தார்.


ALSO READ | ஈஷா வித்யா ஆசிரியர்களுக்கு காக்னிஸன்ட் ஊழியர்கள் வழங்கிய ஆன்லைன் வகுப்பு பயிற்சி


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR