கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடம் எடுப்பது தொடர்பாக ஈஷா வித்யா பள்ளி ஆசிரியர்களுக்கு பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிஸன்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் சிறப்பு பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சியில் கோவை, ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் சித்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் செயல்படும் ஈஷா வித்யா பள்ளிகளைச் சேர்ந்த 374 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அந்நிறுவனத்தைச் சேர்ந்த 60 தன்னார்வலர்கள் இப்பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்து நடத்தினர். 2 பிரிவுகளில் நடந்த இப்பயிற்சியில் ‘Digital Mastery' என்ற தலைப்பின் கீழ் ஸ்மார் ஃபோன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை சிறப்பாக கையாள்வது தொடர்பாகவும், ‘Digital Teaching' என்ற தலைப்பின் கீழ் ஆன்லைன் வகுப்பில் மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவும் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும், Microsoft Suite ஐ பயன்படுத்துவது, சமூக வலைத்தளங்களை சிறப்பாக கையாள்வது, Digital content களை உருவாக்குவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, காக்னிஸண்ட் அவுட்ரீச்சின் உலகளாவிய தலைவர் திரு. தீபக் பிரபு மட்டி கூறுகையில், “கோவிட்-19 பெருந்தொற்று கல்வி முறைகளையும் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி கற்கும் வாய்ப்பினையும் மிக மோசமாக பாதித்திருக்கிறது. இதனால் இணையவழி கல்வி கற்றல் முறைகளை முன்னிலைப்படுத்துவதும், ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கையாள்வதற்கான பயிற்சி வழங்குவதும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும் மாணவர்களின் கல்வி நின்றுவிடாமல் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் ‘Cognizant®️ e-Teacher’ இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் ஈஷா வித்யாவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அழிக்கிறது” என தெரிவித்தார்.
பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர் ஒருவர் தனது அனுபவத்தை பகிரும்போது, “கரோனா லாக்டவுன் காலத்தில் பாரம்பரிய வகுப்பு அறை கல்வி முறையில் இருந்து ஆன்லைன் கற்பித்தல் முறைக்கு மாற வேண்டிய சூழல் உருவானது. ஆன்லைன் வகுப்புகளில் ஸ்மோர்ட் போன் ஒரு மிக முக்கிய கருவியாக இருக்கிறது. மாணவர்களிடம் ஆர்வத்தை தூண்டும் விதமாக ஸ்மார்ட் போன்களை எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என்பதை இந்தப் பயிற்சியில் சொல்லி கொடுத்தது மிகவும் உதவிகரமாக உள்ளது” என்றார்.
இப்பயிற்சியின் மூலம் ஈஷா வித்யா பள்ளிகளில் பயிலும் சுமார் 8,000 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.
ALSO READ | Isha: பாறைநிலத்தையும் சோலைவனமாக்க முடியும் என்பதை உணர்த்திய சாதனை பெண்மணி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR