தமிழகத்தில் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்கப்பதற்கு முதல்வர் அனுமதி
பலரின் வாழ்வாதாரத்தை காக்க ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் வாகன பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: நாட்டில் கொரோனா (COVID-19) பாதிப்பு அதிகரித்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து நிறுவனம் மற்றும் அமைப்புகள் முற்றிலுமாக முடங்கியது. அதில் ஒன்று தான் ஓட்டுனர் வாகன பயிற்சிப் பள்ளிகள் (Driving Schools). மார்ச் மாதம் முதல் சுமார் ஐந்து மாதங்களாக தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.
ALSO READ | ஆகஸ்ட் 10 முதல் மீண்டும் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி: EPS
தமிழகத்தில் மட்டும் சுமார் 2000 வாகன பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த வாகன பயிற்சிப் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என வாகன பயிற்சிப் பள்ளிகளின் உரிமையாளர்கள் தமிழக அரசிடம் (TN Govt) கோரிக்கை வைத்தனர்.
அதாவது, தற்போது அன்லாக்-3 தளர்வில் வாகன ஓட்ட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல தங்களை செயல்பட அனுமதி அளிக்கக் கோரி வாகன பயிற்சி பள்ளிகள் சார்பில் முறையிடப்பட்டது.
ALSO READ | மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: EPS திட்டவட்டம்!
அவர்களின் கோரிக்கையை அடுத்து, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் வாகன பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi k Palaniswami) உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் பலரின் வாழ்வாதாரம் மேம்படும். அதேபோல சென்னையில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.