ஆந்திராவில் விபத்தில் உயிரிழந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து, ஆந்திரா மாநிலம் குப்பம் வழியாக சரக்கு லாரி ஒன்று மாங்காய்கள் ஏற்றி சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வளைவில் லாரி நிலை தடுமாறி, பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 10-பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும், இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். 


இந்த விபத்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர்,  லாரி அதிவேகத்தில் விரைந்து வந்து  பள்ளத்தில் கவிழ்ந்ததில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


இந்நிலையில், ஆந்திராவில் விபத்தில் உயிரிழந்த வேலூர் மாவட்டம் கல்நார்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்!


இதையடுத்து, விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, அதேபோன்று லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.