மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் ரூ.15,000 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அவர் கூறும்போது,,! 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையின்படி மத்திய குழு 5 இடங்களில் பார்வையிட்டது. தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை பார்வையிட்டது. இப்போது மதுரையில் மருத்துவமனையை அமைப்படும் என்ற ஆணையை தமிழக சுகாதார செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 


அதன்படி, தோப்பூரில் 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன மருத்துவமனை  ரூ.15,000 கோடி மதிப்பில் அமைய உள்ளது. இங்கு சுமார் 100 மருத்துவர்களுக்கான பணி ஏற்படுத்தப்படும் என்றார். மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும்,எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தரும் என்றார்.