விவசாயி என்று சொல்லிக் கொள்ள எடப்பாடிக்கு தகுதி இல்லை: ஸ்டாலின்!!
விவசாயி என்று சொல்லிக் கொள்வதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்றும், அவர் விஷவாயு என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!!
விவசாயி என்று சொல்லிக் கொள்வதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்றும், அவர் விஷவாயு என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!!
நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கரூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அதிமுகவும், பாஜகவும் போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து ஸ்டாலின் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் உறுதி என்றார்.
தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் பாதித்த மக்களை உடனடியாக சந்தித்தாரா என கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவைப் பற்றி மோசமாக விமர்சித்தவர் டாக்டர் ராமதாஸ் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அதிமுகவும், பாஜகவும் போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
மக்களின் தேவைகளை உணர்ந்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்து உள்ளதாக கூறிய ஸ்டாலின், பா.ஜ.க போலியான வாக்குறுதிகளை அளித்து வருகிறது என்றார். கள்ளக்குறிச்சியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை முடித்த ஸ்டாலின், கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அங்கிருந்த கடைகள், பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரையும் சந்தித்து கைகுலுக்கி அவர் ஆதரவு திரட்டினார்.