வேளாண்மைத் துறை பணியாளர் வாரிகளுக்கு அரசுபணி ஆணை வழங்கினார் EPS!
வேளாண்மைத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 45 பணியாளர்களின் வாரிகளுக்கு அரசுபணி ஆணையினை முதல்வர் பழனிசாமி அவர்கள் வழங்கினார்!
வேளாண்மைத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 45 பணியாளர்களின் வாரிகளுக்கு அரசுபணி ஆணையினை முதல்வர் பழனிசாமி அவர்கள் வழங்கினார்!
தமிழக முதல்வர எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (27.9.2018) தலைமைச் செயலகத்தில், வேளாண்மைத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 45 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
வேளாண்மைத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 45 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, அவர்களது கல்வித் தகுதி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் காவலர், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் தட்டச்சர், கிடங்கு மேலாளர் (தரம்-3) ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் திரு.இரா. துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் முனைவர் திருமதி கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., வேளாண்மைத் துறை இயக்குநர் திரு.வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.