தில்லியில் பிரதமர் மோடியை சந்திக்கச் சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா தில்லியில் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேச உள்ளார். 


தன் பிறகு முதல்வர் ஜெயலலிதா தில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் 4.45 மணியளவில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது தமிழக திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசயுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு தரக்கோரி கோரிக்கை வைப்பார் என்றும் காவிரி, மீனவர் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளைத் தீர்க்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்த உள்ளார்.


இந்த நிலையில், பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தில்லிக்கு செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா புறப்பட்டு சென்றார்.


பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளுடனான சந்திப்பு முடிந்த பிறகு டெல்லியில் இருந்து இன்றிரவு 7 மணிக்கு முதலமைச்சர்  ஜெயலலிதா தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார்.