தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு  பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்று (Coronavirus) பரவலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு,18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேரு விளையாட்டரங்கில், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.


அப்போது உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin), விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற டீம் ஸ்பிரிட் மிக முக்கியம்.  விளையாட்டு வீரர்கள் வெற்று பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் குழுவாக இணைந்து செயல்படும் போது முழு வெற்றியை பெற முடியும். விளையாட்டு துறைக்கு அரசு என்றுமே துணை நின்று ஊக்கமளிக்கும்.” என்றார்.


Also Read | ஜூலை 5 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மு.க. ஸ்டாலின்


இதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கு வகையில், ஒலிம்பிக் போட்டிகளில் தங்க பதக்கம் வென்றால் ₹3 கோடி, வெள்ளிப்பதக்கம் வென்றால் ₹2 கோடி, வெண்கலம் வென்றால் ₹1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்”, என்று அறிவித்துள்ளார்.


மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த 6 வீரர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் இரண்டாவது அலை  தற்போது குறைந்து வருகிறது. எனினும்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Tamil Nadu: இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR