முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஜூன் 21-ம் தேதி திமுக MLA-க்கள் கூட்டம்

தமிழகத்தில், தேர்தலில் திமுக வெற்றி பெற்று புதிதாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அரசு பதவி ஏற்றுக் கொண்ட பிறகு, முதல் சட்ட சபைக் கூட்டத் தொடர், வரும் திங்கட்கிழமை அன்று தொடங்குகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 19, 2021, 10:37 AM IST
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஜூன் 21-ம் தேதி திமுக MLA-க்கள் கூட்டம் title=

தமிழகத்தில், தேர்தலில் திமுக வெற்றி பெற்று புதிதாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அரசு பதவி ஏற்றுக் கொண்ட பிறகு, முதல் சட்ட சபைக் கூட்டத் தொடர், வரும் திங்கட்கிழமை அன்று தொடங்குகிறது. 

தமிழகத்தில் (Tamil Nadu) 16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் 21-ந்தேதி, அதாவது திங்கட்கிழமை தொடங்குகிறது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆளுநர் உரைக்குப்பின் அவை ஒத்திவைக்கப்படும். அதன்பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கூடி, சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள்  நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்ய உள்ளனர். 

இந்த நிலையில், அன்று மாலை 5 அமணிக்கு, அதாவது ஜூன் 21-ம் தேதி மாலை,  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 21-06-2021 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறும். அதுபோது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ: TN Lockdown: தமிழகத்தில் ஊரடங்கு தொடருமா, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

மேலும், இன்று, தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு, இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக, மனநிறைவாக இருந்தது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News