புது டெல்லி: இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும்படி அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும். நிதி ஆயோக் அமைப்பின் 5வது ஆட்சிமன்றக் குழு கூட்டம் ஆகும். இந்தக் கூட்டத்தில் விவசாயம், நீர் மேலாண்மை, பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி பற்றியும் விவாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.


நிதி ஆயோக் கூட்டதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றே டெல்லி வந்தடைந்தார். இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க்கவுள்ளார்.


இந்தநிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். மேலும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசினார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா ஆகியோர் உடன் இருந்தனர்.