மேகதாது அணை குறித்து பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்...
உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்த நிலையில் தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்.....
உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்த நிலையில் தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்.....
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கூடாது என தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
மேகதாது அணை கட்ட கர்நாடகா சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க நீர்வள ஆணையத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.
மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கையை திருப்பி அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்த நிலையில் முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.