தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமத்தில் உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு வரும் 24.10.2018 வரை தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமத்தில் உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு 24.10.2018 முதல் 143 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு அக்டோபர் 24 முதல் டிசம்பர் 15 வரை 60 க.அடி/வினாடி வீதமும், டிசம்பர் 16 முதல் ஜனவரி 31 வரை 50 க.அடி/வினாடி வீதமும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 15 வரை 45 க.அடி/வினாடி வீதமும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு அக்டோபர் 24 முதல் நவம்பர் 30 வரை 40 க.அடி/வினாடி வீதமும், டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை 30 க.அடி /வினாடி வீதமும், மார்ச் 1 முதல் மார்ச் 15 வரை 20 க.அடி /வினாடி வீதமும், ஆக மொத்தம் 1035.50 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு 3386 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு 1873 ஏக்கர், ஆக மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் தமிழக முதல்வர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது!