குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலுள்ள பெரியாறு பிரதான பாசன பகுதிகளில் கடந்த ஏழு ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தினால் நிலத்தடி நீர் கிடைக்கப் பெறவில்லை என்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறும் வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தத்தை அடுத்து வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலுள்ள பெரியாறு நீட்டிப்பு பாசன பகுதிகளுக்கு குடிநீர்த் தேவைக்காக மொத்தம் 345.60 மி.க. அடிக்கு மிகாமல் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 200 கஅடி வீதம் 22.10.2018 முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.



மேலும் குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படும் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்து பயனடையுமாறும் வேண்டுகோள் வைத்துள்ளார்!