புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார் முதல்வர் நாராயணசாமி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் மதுபான கடைகளை மூட CM நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். வரும் மார்ச் 31ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இன்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 


கொரோனாவின் ஆபத்தை உணர்ந்த புதுச்சேரி மக்கள் தங்களை கட்டுப்படுத்தி கொண்டுள்ளனர். புதுச்சேரியின் 4 பிராந்தியங்களும் முழு கட்டுபாட்டில் உள்ளது. கொரோனாவில் இருந்து நம்மை காப்பாற்ற ஒரே வழி, சுய தனிமைப்படுத்தி கொள்வது. இதனை உணர்ந்து தான் நாளை முதல் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் நோயின் தன்மையை உணர்ந்து ஊரடங்கு உத்தரவை தொடரலாம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.


மேலும், அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆலோசித்தபோது, தனிமைப்படுத்துவதை விட வேறு மருந்து கிடையாது என்றும் புதுச்சேரியில் போர்க்கால அடிப்படையில் நோயை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முடுவெடுக்கப்பட்டது. மேலும் வரும் 31 ஆம் தேதி வரை மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.


இன்று மாலை 5 மணி முதல் 31 ஆம் தேதி வரை தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.