தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை ரூ1.05 லட்சமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உயர்த்தி உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக எம்எல்ஏ-க்கள் தங்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிவந்தனர். இந்நிலையில் தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. 


இதைதொடர்ந்து தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ. 2.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படுகிறது என்றும் அவர் அறிவித்தார். 


தற்போது எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.55 ஆயிரமாகவும், தொகுதி மேம்பாட்டு நிதியானது ரூ. 2 கோடியாகவும் வழங்கப்பட்டு வருகிறது.