கொரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழக்குவது குறித்த விதிகளை வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி, கொரோனா சிகிச்சைப் பணியில் முன் கள பணியாளராக ஈடுபட்டார்.  கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா பாதித்து உயிரிழந்தார். 


மேலும் படிக்க | நான் முதல்வன் திட்டம்: புதிய படிப்புகளை சேர்க்க கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தால், 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.


அதன் அடிப்படையில், தனது மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


இந்த உத்தரவுப்படி மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, செவிலியர் தனலட்சுமியின் மகளுக்கு கருணை அடிப்படையில் பணி கோரிய மனுவை நிராகரித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அருணாச்சலம் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது, அரசு தரப்பில் கொரோனா காலகட்டத்தில் உயிரிழதவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் வகையில் விதிகள் வகுக்கப்படவில்லை என்பதால், அரசு பணியை பெற தகுதி இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.


இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கொரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு இழப்பீடும், குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டுமெனவும், அதற்கான விதிகளை வகுக்க வேண்டுமெனவும் அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு கடந்த மே 11ம் தேதி உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். 


மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளி கல்வித்துறை! புதிய அதிரடி திட்டம்!


ஆனால், அதன்படி மாநில அரசு எந்த விதியையும் இதுவரை வகுக்கவில்லை என தெரிவித்த நீதிபதி, உரிய விதிகளை வகுத்து தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு,  விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ