மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி காலமானார்

மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி (வயது 82) இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.
துக்ளக் இதழின் ஆசிரியர், நடிகர், பிரபல எழுத்தாளர் என தன்மை கொண்டவர் சோ ராமசாமி. சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
ஜெயலலிதாவும், சோ ராமசாமி நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அரசியலில் ஜெயலலிதாவுக்கு சோ ராமசாமி ஒரு சிறந்த ஆலோசகாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சோ அவர்கள் இன்று அதிகாலை 4.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். சோ.ராமசாமி காலமானதை அவரது மருத்துவர் விஜயசங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.