தஞ்சை பெரிய கோவில்  (Tanjore Big Temple) கட்டி உலக அளவில் புகழ் மிக்கவராக உள்ள இராஜராஜ சோழனின் பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், 1036வது சதய விழாவை முன்னிட்டு இராஜராஜ சோழனின் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகப் புகழ்பெற்ற, ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரியகோவிலை கட்டிய, மாமன்னன் இராஜராஜ சோழனின் பிறந்த நாள் மற்றும் அரியணை ஏறிய ஐப்பசி சதய நட்சத்திரம் ஆண்டுதோறும்  சதய விழாவாக கொண்டாடப்படும். இதேபோல் இந்த ஆண்டு 1036 - வது சதய விழா இன்று காலை மங்கள இசையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து திருவீதி உலா நடைபெற்றது. கொரோனா காரணமாக  கோவில் பிரகாரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 


ALSO READ | தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: தமிழக அரசு


அதனைத் தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதில் தருமை ஆதினம் இருபத்தி ஏழாவது  தொடர்ந்து பல்வேறு கட்சியினர்,  அமைப்பினர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். ஆண்டுதோறும் இரண்டு நாள் விழாவாக கொண்டாடப்படும் சதய விழா, இந்த ஆண்டு கொரோனா தொற்று (Corona Virus) பரவல் காரணமாக ஒரு நாள் மட்டுமே நடைபெறுகிறது, மேலும் சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


சோழ பேரரசரான ராஜராஜன் சோழன் ஐப்பசி மாதம் சதய தினத்தன்று பிறந்தார் என்று வரலாறு கூறும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும், உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சதய விழாவாக அரசு சார்பில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.


ALSO READ | ட்விட்டரில் மாணவருக்கு பதிலளித்த கலெக்டர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR