சமூக வலை தளம் மூலம் மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கிறிஸ்துவ மத போதகர் இடை நீக்கம் செய்யப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிறிஸ்துவ சபையில் ஆங்கில பிரிவில் போதகராக இருப்பவர் சாம் ஜெய்சுந்தர்.


குறிப்பாக, கிறிஸ்துவ சபை என்பது பள்ளி குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுடன் இணைந்து பைபிள் மற்றும் கிறிஸ்தவத்தைப் பற்றி போதனைகளை எடுத்துக் கூறும் ஒரு அமைப்பாகும்.


ட்விட்டர் பயனர் @ @JoelGiftson17 ஞாயிற்றுக்கிழமை வேலூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளியின் மாணவர்களுக்கும் ஜெய்சுந்தருக்கும் இடையில் சாட்களின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்த பின்னர் இந்த விஷயம் அம்பலமாகியது. உரையாடலில், ஜெய்சுந்தர் மாணவிகளிடம் தர்ம சங்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஆபசமான பொருள் கொண்ட வகையிலும்  சேட் செய்தார்.



இவரின் மேல் பல முறை புகார் அளிக்கப்பட்டிருந்தும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இப்போது, இந்த சம்பவம் சமூக ஊடகங்கள் மூலம் அம்பலமாகியதை அடுத்து, கிறிஸ்துவ சபை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு அவசர கூட்டத்தை நடத்தி, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து, அவர் திங்கள்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.


சாம் ஜெய்சுந்தர் கடந்த 17 ஆண்டுகளாக கிறிஸ்து சபையில் ஜெப கூட்டங்கள் நடத்தி வருகிறார்.  தமிழ்நாட்டில் 2006 ஆம் ஆண்டு முதல், கிறிஸ்துவ மிஷினரிகள் நடத்தும் பள்ளியில், அடிக்கடி ஜெப கூட்டம் நடத்தி வந்தார். மாணவர்களுக்கு பைபிள் போதனைகளை கூறி வந்தார். 


ALSO READ | அதிமுக எம்.எல்.ஏ தனது மகளை கடத்தி சென்றதாக பகீர் புகார் அளிக்கும் கோயில் அர்ச்சகர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR