ஏடிஎம் கார்டின் கடவு எண்ணினை தவறாக உள்ளிடப்பட்டு கார்ட் முடக்கப்பட்டதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் பிச்சை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற குமரகோட்டை முருகன் கோவில் வெளியே ரஸ்ய நாட்டைச் சேர்ந்த எவன்ஜலின் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். 


இதனை பார்த்த வியந்த பக்தர்கள் அவருக்கு உதவி செய்தனர். பிறகு அங்கு வந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடந்த விவரத்தினை தெரிவித்துள்ளார்.


பின்னர் அவரை மீட்ட காவல் துறையினர் அவருக்கு பண உதவி செய்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த தகவலறிந்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் இச்சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார்.


 



 


’கவலை படாதே எவன்ஜலின் உங்களின் நாடான ரஷ்யா இந்தியாவின் நட்பு நாடு, சென்னையில் உள்ள எங்கள் அதிகாரிகள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்’ என அதில் பதிவிட்டுள்ளார்.