திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் வருகிற 23-ம் தேதி பேரணி நடத்த உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருடன் கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர்,


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தக் கூடிய வகையில் திமுக  தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று அனைத்து கட்சித் தலைவர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.


இதையொட்டி வருகிற 23ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னையில் குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு பேரணி என்ற தலைப்பில் ஒரு மிகப்பெரிய பேரணியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


என்றார்.