சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீயாய் பரவி வருகிறது. மக்களது இயல்பு வாழ்கையை புரட்டிப்போட்டுள்ள இந்த தொற்று பாரபட்சமில்லாமல் அனைத்து தரப்பினரையும், அனைத்து வயதினரையும் வெகுவாக பாதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகவும் பாதிக்கப்பட்டவர்ளில் நாட்டின் எதிர்கால நம்பிக்கைகளான மாணவர்களும் உள்ளனர். அதுவும், பொதுத் தேர்வுகளை எதிர்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இது ஒரு சவால் மிகுந்த நேரம் என்று கூறினால் அது மிகையாகாது.


இந்த நிலையில் பொதுத் தேர்வுகள் குறித்த மிகப் பெரிய கேள்வி எழும்பியுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் (Board Exams) ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த குழப்பம் நீண்டு கொண்டிருந்தது. 


இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரக்ளுக்கான பொதுத்தேர்வு ஆகியவை பற்றி ஆலோசிக்க பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.


கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தார்.


இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய முக்கிய விவரங்கள் பின் வருமாறு:


- இந்த ஆண்டின் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்  தள்ளி வைக்கப்படும், கண்டிப்பாக ரத்து செய்யப்படாது என்று கூறினார் கல்வித்துறை அமைச்சர். கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தவுடன் தேர்வுகள் நடத்தப்படும்.


ALSO READ: CM MK stalin: உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் நிவாரணம்


- தேர்வுக்கு 15 நாட்கள் முதல் ஒரு மாதத்திற்கு முன்னர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்றார் அமைச்சர்.


- தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியமான தேதிகள் குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகு தெரிவிக்கப்படும் என விளக்கமளித்தார் அன்பில் மகேஷ்.


- பத்தாம் வகுப்பைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மதிப்பெண் அளிக்கும் செயல்முறை இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.


கொரோனா தொற்றுக்கு (Coronavirus) இடையில், பொதுத் தேர்வுகளை நடத்துவது ஒரு மிகப்பெரிய சவாலான விஷயமாகும். மாணவர்களின் பாதுகாப்புக்கு அதிகபட்சமான உறுதிப்பாட்டை அளிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஆகையால், எங்கெல்லாம் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவே அங்கெல்லாம், தேர்வுக்கான மாற்று வழிமுறைகளை பின்பற்றுவது தவறல்ல என நிபுணர்கள் நம்புகிறார்கள். எனினும், ஒருவது வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயமாக இருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கு எந்த மாற்றும் சரியாக இருக்காது என்பதே அவர்களது கருத்தாகவும் உள்ளது. 


ஆகையால், தொற்று கட்டுக்குள் வந்தவுடன், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என அரசாங்கம் (Tamil Nadu Government) எடுத்துள்ள முடிவில் அனைவருக்கும் ஒப்புதலே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


ALSO READ: Good news! சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பதிவு கட்டணம் விலக்கு – தமிழக அரசு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR