கொரொனா பரவல் (Corona Virus) காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் மிகவும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களின் கற்றல் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் 165 நாட்களுக்குப் பின் MBBS, BDS மற்றும் நர்சிங் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நடத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 


அந்த வகையில் இன்று முதல் இரண்டாம் ஆண்டு தொடங்கி நான்காம் ஆண்டு வரையிலான மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பிற படிப்பு படித்து மாணவர்களுக்கான கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. 


மருத்துவக் கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன. 


ALSO READ | TN Assembly: 'தி.மு.க ஒரு அடக்க முடியாத யானை'- சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்!!


கல்லூரிக்கு வரும் மாணவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை (Corona Test) மேற்கொண்டு நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், இரண்டு தவணைத் தடுப்பூசியும் (Corona Vaccine) செலுத்தி இருக்க வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மருத்துவ கல்வி இயக்குனரகம். 


அதிக மாணவர்கள் கொண்ட வகுப்பறையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு பாடம் நடத்துவது , விடுதிகளில் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாணவர்களுக்கு தனி அறையை ஒதுக்கீடு செய்வது , குழுவாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து பார்சல் முறையில் மாணவர்களுக்கு உணவுகளை வழங்குவது , விடுதிகளில் பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருகைக்கு தடை உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட உள்ளன.


ALSO READ | Sterlite Plant Issue: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கமல்ஹாசன் வலியுறுத்தல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR