சென்னை: கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், நாட்டில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்ட மொத்தம் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 31 ஆம் தேதி வரை, இந்த உத்தரவை நீடிக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் உத்தரவை குறித்து முடிவெடுக்க, சென்னை தலைமை செயலகத்தில் மூத்த மற்றும் முக்கிய அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு உள்ளார். இதில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களும் இடம் பெற்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸின் பயணம், இன்று உலகம் முழுவதும் 160-க்கு மேற்பட்ட நாடுகளின் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அதுவும் எங்கிருந்து பரவியதோ, அந்நாட்டில் கொரோனோ வைரஸின் அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது எனத் தெரிகிறது. 


ஆனால் மறுபுறம் இத்தாலி, அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் நாடுகளில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான புதிய வழக்குகள் பதிவாகி வருகிறது. தற்போது நிலவரப்படி பார்த்தால், கொரோனோவுக்கு எதிரான போராட்டம் மேற்கு அரைக்கோளத்தை நோக்கி நகர்ந்துள்ளது என்று கூறலாம்.


கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 651 புதிய இறப்புகள் நடந்துள்ளது. மொத்தம் 5,476 பேர் இறந்துள்ளனர். கொரோனாவால் அதிக இறப்புக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதலிடம் வசிக்கிறது. அதாவது சீனாவைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா 8 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.


தமிழகத்தை பொறுத்தவரை 7 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அழிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 


ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, நாட்டு மக்கள் அனைவரும் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இந்த உத்தரவை மேலும் 8 மணி நேரம் அதிகரித்து, இன்று (திங்கக்கிழமை) காலை 5 மணி வரை நீடிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.