முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தேவையில்லாத வதந்திகள் சில பேரால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவற்றில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.


இது போன்று வதந்தியை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர். ஆனாலும் முதல்வரின்ரின் உடல் நிலை பற்றிய வதந்தி அவ்வப்போது இணைய தளங்கள் மூலமாக பரப்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.


இதுபோன்ற வதந்திகளை இணையதளம் வாயிலாக பரப்புபவர்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 50 பேர் வரை இதனை பரப்பி விடுவதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.


ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.