அண்ணாவின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டது:- சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார். முதல் பிரதியை, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சருமான வெ. சரோஜா பெற்றுக் கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.