தயிர் என்றால் புரியாது! தமிழ்நாட்டில் ‘தஹி’ என்றால் புரியும்! அடம் பிடிக்கும் FSSAI
Hindi Imposition Via FSSAI: தமிழ்நாட்டில் ‘தஹி’ என்றால் புரியும் என்றும், இந்தி்யை பயன்படுத்த ஆவினுக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு வலுக்கிறது
சென்னை: தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி பால் பொருட்களில் தயிர் பாக்கெட்டில் "தஹி" என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான (FSSAI) தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறையும்.. ஏதோ ஒரு மூலையில் கொஞ்சமாக ஹிந்தி திணிப்பு நிகழ்ந்தாலும் அதை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுப்பது ஒரு தமிழகமாக இருக்கும். அப்படித்தான் தற்போது மீண்டும் ஹிந்தி திணிப்பு விவகாரம் உச்சம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி பால் பொருட்களில் தயிர் பாக்கெட்டில் "தஹி" என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான (FSSAI) தெரிவித்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் இது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னடத்தில் மோசரு மற்றும் தமிழின் தயிர் போன்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தஹி என்று வார்த்தையை பயன்படுத்த வேண்டும். தேவை என்றால் அடைப்புக்குறிக்குள் தமிழ் மற்றும் கன்னட வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: ஹிந்தியை திணிக்கும் வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போர் தொடரும்
இந்தி வார்த்தை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது இரண்டு மாநிலங்களிலும் இந்த விவகாரம் கடும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது.
இரண்டு மாநிலங்களிலும் வட இந்தியர்கள் அதிகம் இருப்பதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விதியை பின்பற்றாத பட்சத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆவின் மற்றும் நந்தினி அமைப்புகளின் உரிமைகளை ரத்து செய்யும் வாய்ப்புகள் உள்ளன.
இதையடுத்து கர்நாடகாவின் நந்தினி நிறுவனம் சார்பாக விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஆவின் சார்பாகவும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் இந்த உத்தரவு தென் மாநிலங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதன் எதிரொலியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலுவான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!
குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்! என்று முதலமைச்சர் ஸ்டாலின் இந்தித் திணிப்புக்காக ரூட்டை மாத்தும் மத்திய அரசை கண்டித்துள்ளார்.
மேலும் படிக்க | புதுப்பொலிவுடன் ரூட்டை மாத்தும் வாட்ஸ்அப்! சேட்டிங்கில் சேரும் புதிய அம்சங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ