புதுப்பொலிவுடன் ரூட்டை மாத்தும் வாட்ஸ்அப்! சேட்டிங்கில் சேரும் புதிய அம்சங்கள்!

1 minute video message Of whatsapp: சேட்டிங் தளமான வாட்ஸ்அப், தனது செயலியில் மக்கள் உரையாடும் போக்கையும் பாணியையும் மாற்றி அமைக்கும் புத்தாக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

வாட்ஸ்அப் நாளுக்கு நாள் ஸ்மார்ட்டாகி வருகிறது. சமீபத்தில், வாட்ஸ்அப் இதுபோன்ற சில அம்சங்களைப் பற்றிய தகவல்களை அளித்துள்ளது, இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த அம்சங்களின் உதவியுடன், மக்களுடனான உங்கள் தொடர்பு இன்னும் சிறப்பாக மாறும்.

1 /5

தவறான செய்தியை தவறுதலாக அனுப்பியிருந்தால், பீதி அடைய வேண்டாம்... வாட்ஸ்அப்பின் மெசேஜ் எடிட் அம்சத்தின் உதவியுடன், இந்த செய்திகளை உங்களால் திருத்த முடியும். செய்தி அனுப்பிய 15 நிமிடங்களுக்கும் திருத்திவிடலாம். அதே நேரத்தில், திருத்தப்பட்ட செய்தி என்ற குறிப்பும் செய்தியை பெற்றவர்களுக்கு கிடைத்துவிடும்.  

2 /5

இப்போது WhatsApp இல், பயனர்கள் ஆடியோ போன்ற வீடியோ செய்திகளை அனுப்ப முடியும். உதாரணமாக, குரல் குறிப்பை அனுப்ப, மைக்கைக் கிளிக் செய்வதுபோல வீடியோ செய்தியை அனுப்ப, கேமரா பொத்தானைத் தட்ட வேண்டும்.

3 /5

தனியுரிமையை கவனித்து, வாட்ஸ்அப் இப்போது ஆடியோவிலும் ஒரு முறை வியூ அம்சத்தை சேர்க்கப் போகிறது. இனிமேல் ஆடியோ செய்தியையும் ஒருமுறை பார்க்க முடியும்.

4 /5

குரூப் அட்மின்களுக்கான புதிய அப்டேட்டையும் வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. இப்போது குழுவில் யாரை சேர்க்க வேண்டும், யாரை சேர்க்கக்கூடாது என்ற கட்டுப்பாடு அட்மினுக்கு இருக்கும். அதாவது ஒரு குழுவில் யாராவது சேரும்போது, அப்ரூவ் அண்ட் ரிஜெக்ட் என்ற கோரிக்கை அட்மினுக்கு வரும்.

5 /5

வாட்ஸ்அப் குழு பயனர்களுக்கு எளிதான அம்சத்தையும் கொண்டு வருகிறது, இதன் உதவியுடன் நிர்வாகி தொடர்புகள் பட்டியலில் பயனர்களின் பெயரைத் தேடுவதன் மூலம் பொதுவான குழுக்களையும் காணலாம்.