சென்னை: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த கடிதத்தில், வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததால், சென்னையில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனைத் தீர்க்க, உடனடியாக கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு உரிய நீரை திறந்து விட வேண்டும் என்று கூறியுள்ளார். 


 



 


சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஆந்திர - தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே கிருஷ்ணா நதி நீரை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். 


தமிழகத்துக்கு குறிப்பாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரம் வடகிழக்குப் பருவ மழைதான். ஆனால், இந்த ஆண்டு, வடகிழக்குப் பருவ மழை போதிய அளவில் பெய்யவில்லை. 


எனவே, சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க கிருஷ்ணா நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவுக்கு ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.