தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் 2018 - 2030 புத்தகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை தலைமை செயலகத்தில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்ட புத்தகத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டார்.



இந்த தொலைநோக்குத் திட்டத்தில் பேரிடர் பாதிப்புகள் அபாயங்கள் குறித்த மதிப்பீடுகள், தடுப்பு மற்றும் தணிப்பதற்கான நடவடிக்கைகள், சீரமைப்பு, இழப்பீடு, மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகளை திட்டமிடல், நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.


இதற்கிடையில் பொது சுகாதாரத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 42 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 பேருக்கு முதல்வர் பழனிசாமி அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.