6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷூ வழங்க முதல்வர் உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை அடுத்த திருநின்றவூரில் உள்ள தாசர் அரசு உதவி பெரும் பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், உயர்நிலைப் பள்ளிகளில்  டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு என புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 


இதையடுத்து, கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; நடப்பாண்டில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷூ வழங்க முதல்வர் உத்தரவிட்டுளார். எனவே மாணவர்களுக்கு இலவச வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


அத்துடன், மாணவர்களுக்கு யூ-டியூப் பாடத்திட்டம் அடுத்த மாதத்திற்குள் உருவாக்கப்படும். வகுப்பறையில் நடத்தும் பாடங்களும் யுடியூப்பில்  பதிவேற்றம் செய்யப்படும் எனத் தெரிவித்தார். மேலும், செப்டம்பர் இறுதிக்குள் ஏழாயிரத்து 800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும், இந்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.