CM Stalin: சிங்கப்பூர் Oxygen Cylinders 8 மாவட்டங்களுக்கு விநியோகம்
கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டையே புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த முறை, கொரோனாவினால் பாதிப்பும் உயிர்பலியும் மிகவும் அதிகமாகவுள்ளது. சுகாதாரப் பேரிடரை சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
சென்னை: கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டையே புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த முறை, கொரோனாவினால் பாதிப்பும் உயிர்பலியும் மிகவும் அதிகமாகவுள்ளது. சுகாதாரப் பேரிடரை சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான அரசு, தற்போது நிலவி வரும் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (State Industries Promotion Corporation of Tamil Nadu) தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் துபாயில் இருந்து 1,915 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகள், 5,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 800 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் என மொத்தம் ரூ.40.71 கோடி அளவிலான மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்யும் பணிகள் தொடங்கின.
Also Read | தமிழகத்தில் மேலும் 1 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது
சிப்காட் (SIPCOT) நிறுவனத்தின் தொழில் பூங்காக்களின் அருகில் அமைந்திருக்கும் தொழிற்பிரிவுகளில் இருந்து 2,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் அந்த அமைப்புக்கு கிடைத்தன. அவை பல்வேறு மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
தற்போது தமிழக அரசு சிங்கப்பூரில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 1,000 ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய இந்திய தொழில் கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்டது. அதில் ஒரு பகுதியாக, முதல் கட்டமாக 750 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்து சேர்ந்தன.
இந்த 750 ஆக்சிஜன் சிலிண்டர்களும் மொத்தம் 8 மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னையில் இருந்து அனுப்ப்பப்பட்ட வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
கோவை மாவட்டத்திற்கு 100, சேலம் - 125, ஈரோடு - 100, திருப்பூர் – 75, காஞ்சீபுரம் - 100, வேலூர் - 75, கிருஷ்ணகிரி - 75, திருவள்ளூர் - 100, என இறக்குமதி செய்யப்பட்ட 750 சிலிண்டர்களும் விநியோகிக்கப்பட்டன.
Also Read | Positive Angle of Corona: லேசான கொரோனா பாதிப்பு நோயெதிர்ப்பை அதிகரிக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR