மாநிலக் கோயில்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தங்க ஆபரணங்களை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றுவதற்கான ஆரம்ப வேலைகளைத் தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். ஆன்லைனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பிரன்சிங் முறையில் முதலமைச்சர் நகைகளை உருக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின்கீழ் உள்ள இந்து கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.  



இந்த ஆண்டு பதவியேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பல அதிரடி நடவடிக்கை மற்றும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. ஆலயங்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.


இந்த அறிவிப்புக்கு பலமான எதிர்ப்புகளும் எழுந்தன. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 44,301 கோவில்களில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய பெரிய கோவில்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐம்பது இருக்கும். முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள 47 கோவில்களில் பக்தர்கள் வழங்கிய சிறிய நகைகள் தங்க கட்டிகளாக மாற்றப்பட உள்ளன.


அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இந்து சமய அறநிலைய சட்டத்தில், ஆலயங்களுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை. கோவில் நிர்வாகத்தில் மட்டும் தான் அறநிலையத் துறை  தலையிடலாம், மத வழிபாட்டு விவகாரங்களில்  தலையிட முடியாது.


வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றால், அதற்காக கடவுள்களின் நகைகளை உருக்க வேண்டிய அவசியம் என்ன? ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டாலே போதும் என்றும், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் கூறப்பட்டது.


READ ALSO | கோவில் நகைகளை உருக்க தடைக்கோரி நீதிமன்றத்தில் மனு


இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு, 1977ஆம் ஆண்டு முதலே கோயில் நகையை உருக்கும் திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்திவருகிறது. இதுவரை 5 லட்சம் கிலோ நகைகள் உருக்கப்பட்டு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.


தங்க நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதால் ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. அதேபோல கோயில் நகைகளை தணிக்கை செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று பதிலளித்திருந்தது. இதுதொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அனுமதி அளித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அடங்கிய சட்ட அமர்வு, வழக்கு விசாரணையை அக்.21-ம் தேதிக்கு தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.  


இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நகைகள் உருக்குவது தொடர்பான ஆரம்பக்கட்ட பணிகளை மெய்நிகர் அமர்வில் தொடங்கி வைத்தார்.


ALSO READ |  தமிழ்க் கடவுள் முருகனுக்கு தமிழில் அர்ச்சனை பக்தர்கள் மகிழ்ச்சி.!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR