ஆளுநர், அமலாக்கத்துறை... போட்டுத்தாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன சொன்னார் தெரியுமா?
CM Stalin On Ponmudi ED Raid: வட மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு, மாநில அரசு மீது ஏவப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் அந்த பணியை தொடங்கியுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
CM Stalin On Ponmudi ED Raid: அமைச்சர் பொன்முடி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் சோதனையை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். பெங்களூருவில் இன்று காங்கிரஸ் தலைமையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க அவர் சென்னை விமானம் நிலையம் வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,"ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பீகார் மாநிலம் பாட்னாவில் கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவுகள் எடுத்துள்ளனர். அதேபோல் இன்றும் நாளையும் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் 24 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
பீகார் மாநிலத்தை தொடர்ந்து கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்துவதற்கு தொடர்ந்து கூட்டம் கூட்டப்படுவது, பாஜகவின் ஆட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்துள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை. இதுபோன்ற பணிகளை ஏற்கனவே வட மாநில பகுதிகளில் பாஜக செய்து கொண்டிருந்தது தற்போது தமிழ்நாட்டில் அந்த பணியை தொடங்கியுள்ளது.
அதைப்பற்றி சிந்தித்து திமுக கவலைப்படவில்லை. அவர்கள் கிஞ்சித்தும் அஞ்சவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. இது கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் போடப்பட்ட பொய் வழக்கு அதன் பின்பு தொடர்ந்து பத்து ஆண்டுகளும் அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. அப்போது எல்லாம் இதுபோன்ற சோதனை அவர்கள் நடத்தவில்லை.
மேலும் படிக்க | “படிப்பு மட்டும்தான் யாராலும் திருட முடியாத நிலையான சொத்து” - முதல்வர் மு.க.ஸ்டாலின்
அண்மையில் பொன்முடி மீது சுமத்தப்பட்ட இரண்டு வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். தற்போது நடந்து வரும் சோதனையின் வழக்கும் அவர் சட்டப்படி சந்திப்பார். வர இருக்கக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை இதற்கெல்லாம் மக்கள் நிச்சயம் பதில் வழங்குவார்கள். அதற்கு தயாராக இருக்கின்றார்கள், இதுதான் உண்மை.
பீகார், கர்நாடகா இன்னும் பல மாநிலங்களில் நடக்க உள்ள இந்த கூட்டத்தை திசை திருப்ப பாஜக செய்யக்கூடிய தந்திரம் தான் இதுபோன்ற சோதனைகள். இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் சமாளிப்பதற்கு தயாராக உள்ளோம்" என்றார்.
மேலும், இது திமுக ஆட்சிக்கும், உங்களுக்கும் (முதல்வர்) அளிக்கப்படும் நெருக்கடியாக இதை பார்க்கிறீர்களா என செய்தியாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர்,"ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆளுநர் தேர்தல் பிரச்சாரத்தை எங்களுக்காக நடத்திக்கொண்டிருக்கிறார். இப்போது அமலாக்கதுறையும் உடன் சேர்ந்து இருக்கிறது. எனவே தேர்தல் பிரச்சாரம் எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்று தான் கருதுகிறேன். இதெல்லாம் சர்வ சாதாரணம் திசை திருப்பக் கூடிய நாடகம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
பெங்களூரு செல்லும் நிலையில் அங்கு காவேரி பிரச்னை குறித்து விவாதிப்பீர்களா என்ற கேள்விக்கு,"காவேரி மேகதாது பிரச்சினை பொருத்தவரை கலைஞர் என்ன முடிவெடுத்து அதை நிறைவேற்றிக் கொண்டிருந்தாரோ அந்த பணியில் இருந்து தாங்கள் சிறிதும் நழுவாமல் அதை கடைபிடிப்போம். தற்போது நடைபெற உள்ள கூட்டம் ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜகவை அகற்றுவதற்கான கூட்டம் தற்போது இந்தியாவுக்கே ஆபத்து வந்துள்ளது. அந்த ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காக இந்த கூட்டம் எதிர்கட்சிகளால் நடைபெற்று வருகிறது" என்று பதிலளித்தார்.
மேலும் படிக்க | பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது: கே.எஸ்.அழகிரி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ